யாழ் – செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாவது அமர்வு நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக அகழ்வுப் பணிகளின் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் இதுவரை வெளிப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் என்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் இன்று வெளிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent Comments