அநுராதபுர தலைமையக காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம், பாடசாலையின் கணித அறையில் பன்னிரண்டு வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அநுராதபுரத்தில் உள்ள ஒரு முன்னணிக் கலவன் பாடசாலையின் ஆசிரியரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன் முற்படுத்தப்பட்ட பின்னர், 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர், திரப்பனே, அத்துங்கமவைச் சேர்ந்த திருமணமான ஆசிரியர் ஆவார்.
அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான கலவன் பாடசாலையைச் சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக அநுராதபுர தலைமையக காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்தனர்.
சந்தேக நபருக்காக முன்னிலையான வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Recent Comments