Sunday, September 7, 2025
Huisதாயகம்ரணிலின் உடல் நிலை அறிக்கை; ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை..!

ரணிலின் உடல் நிலை அறிக்கை; ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு தேசிய வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவர் வெலிகடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் திடீர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரணில் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டதுடன், அவருக்கு கடுமையான ஓய்வு அவசியம் என கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்திருந்தார்.

இதன் பின்னணியில், நேற்று சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்றதுடன், அதன் போது ரணில் விக்ரமசிங்க நேரில் முன்னிலையாகமல் ZOOM தொழிநுட்பம் ஊடாக தோன்றியிருந்தார்.

இந்த நிலையில், ரணிலின் உடல் நிலை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!