யாழ் புறநகர்ப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பெண் அரச ஊழியரும் மாணவனும் அரை குறை ஆடைகளுடன் பட்டப்பகலில் பிடிபட்டுள்ளனர். நேற்று மதியம் 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனுடன் வட்சப்பில் நட்பாகிய அரச ஊழியரான பெண் ஒருவர் அம் மாணவனுடன் பல தடவைகள் ஒன்றாக யாழ் புறநகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பல தடவைகள் தங்கியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
தான் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதையும் அப் பெண்ணுடன் சேர்ந்து சில அந்தரங்க புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதையும் தனது பாடசாலை நண்பர்களுக்கு குறித்த மாணவன் தெரிவித்து வந்துள்ளான்.
அத்துடன் வெள்ளிக்கிழமை அந்த பெண்ணை தான் மீண்டும் விடுதியில் சந்திக்கவுள்ளதையும் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் கடுப்பாயின நண்பர்களின் ஒருவன் அம் மாணவனின் தாயாருக்கு விடுதி உள்ள இடம் தொடங்கி அனைத்து விடயங்களையும் தொலைபேசியில் போட்டுக் கொடுத்ததாகத் தெரிய வருகின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் தனது தம்பி மற்றும் சில உறவுகளுடன் குறித்த விடுதியை முற்றுகையிட்டு மகனையும் அப்பெண்ணையும் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளார்கள்.
அதே வேளை மாணவனின் உறவுகளால் பெண்ணும் விடுதியை நடாத்தி வந்த வயோதிபத் தம்பதிகளும் நையப் புடைக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் பெண்ணின் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றிய மாணவனின் உறவுகள் அவற்றை விடுதிக்கு வெளியே கிழித்து வீசிவிட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிசாருக்கு தெரிவி்க்குமாறு அயலவர்கள் கூறிய போதும் அவர்கள் அவ்வாறு செயற்படாது மாணவனை மாத்திரம் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
மாணவனின் தந்தை கொழும்பில் பிரபல நிறுவனத்தில் பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார். மாணவனின் தாயாரும் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிய வருகின்றது.
மாணவனுடன் தங்கியிருந்த இரு பிள்ளைகளின் தாயான பெண் ஊழியரின் கணவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது.
Recent Comments