Monday, September 8, 2025
Huisதாயகம்ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கக் கோரி வடக்கிலும் போராட்டம்..!

ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கக் கோரி வடக்கிலும் போராட்டம்..!

பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் வட க்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

நாடு முழுவதிலுமுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடுமுழுவதும் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த அவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாக இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் எதிர் கொள்வதால் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர் கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே தமது கோரிக்கைக்கு தீர்வை கோரி இன்று வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம் என சுட்டிக் காட்டியுள்ளனர்.

முன்னதாக, யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

ஆளுநர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!