கண்டி தெல்தெனிய வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் அதே வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்தெனிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வைத்தியர் இதற்கு முன்னரும் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வைத்தியர் இன்று புதன்கிழமை (10) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Recent Comments