முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சு எடுக்கும்.
அரசாங்க நிதியில் பராமரிக்கப்படும் இந்த சொத்தை பொது மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
முன்னர் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருந்த இந்த மதிப்புமிக்க வீடுகள், முழு மக்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


Recent Comments