இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்காக ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்த பரிந்துரை மற்றும் நியமனம் ஆகியவற்றை வலுவற்றதாக்கி தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று (23) உயர் நீதிமன்றத்தில் மீளப் பெறப்பட்டுள்ளது.
உடவலவே சோம விகாரையின் விகாராதிபதி வேவெல்துவ ஞானபிரபா தேரர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று பிரத நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன் அழைக்கப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, மனுவை மீளப்பெற அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.
அதன்படி, குறித்த மனுவை மீளப்பெற அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Recent Comments