Monday, October 27, 2025
Huisதாயகம்வட மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்..!

வட மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்..!

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடக்கு மாகாண இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டு சபை ஆகியவற்றில் ஏற்பட்ட குழப்பகரமான தகவல்கள் குறித்து ஆளுநரால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அறிக்கை கோரப்பட்டது.

அதற்கமைய மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன், வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளும் – ஆசிரியரைப் பழிவாங்கி வரும் முயற்சிகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

“மாகாண கல்வி திணைக்களத்தினர் தமது மோசடிகளை மூடி மறைப்பதற்காகவே, திருபுபடுத்தப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் மூடி மறைக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாகாண இடமாற்ற சபை உறுப்பினர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோதமான, அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள் அனைத்தையும் மறைத்து, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, எமது இந்த ஊடக அறிக்கை மூலம் ஆளுநர் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாகாண கல்விப் பணிப்பாளரின் பொய்யானதும் புனையப்பட்டதுமான அறிக்கையின் உண்மை நிலையையும், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் என்பதற்காக குறித்த ஆசிரியர் பழிவாங்கப்பட்டுள்ள விடயத்தையும் அறியத் தருகின்றோம்.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!