Friday, January 23, 2026
Huisதாயகம்இலங்கையின் பாதீடு குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை..!

இலங்கையின் பாதீடு குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை..!

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings), இலங்கையின் புதிய பாதீடு குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்புக்கு உறுதிபூண்ட போதிலும், இந்த பாதீடு நாட்டின் நீண்டகால பொருளாதார வாய்ப்புகளுக்கு கணிசமான அபாயங்களை ஏற்படுத்துவதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு நிதி முன்னேற்றத்தை அடைவதற்கு அத்தியாவசியமான பொது முதலீட்டுக்கான செலவினங்களை அரசாங்கம் கடுமையாகக் குறைத்தமை ஆகும்.


இந்த முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விகித அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப இலக்கை விட கணிசமாக குறைந்து விட்டதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கருதுகிறது.

இந்த செலவினக் குறைப்பு பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆற்றலை பலவீனப்படுத்தக்கூடும் என்றும், எதிர்காலத்தில் நிதி ஒருங்கிணைப்பு சவாலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வலியுறுத்தியுள்ளது.


அதேநேரம், அதிக அரசாங்கக் கடன் அளவு தொடர்ந்து நாட்டின் பிரதான பலவீனமாகவே இருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

எனவே,ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, தற்போதைய நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்காக அத்தியாவசிய பொது முதலீடுகளைக் குறைப்பது, இறுதியில் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மைக்கு சவாலாக அமையலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!