Friday, January 23, 2026
Huisதாயகம்சிறையில் 16 வருடங்கள் வாடிய தமிழருக்கு கண்பார்வை இழப்பு..!

சிறையில் 16 வருடங்கள் வாடிய தமிழருக்கு கண்பார்வை இழப்பு..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தற்கொலை குண்டு தாக்குதல் வழக்கில் 2ஆவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் 16 வருடங்களாக சிறையில் இருப்பதால் கண்பார்வை இழந்துள்ளதாக சட்டத்தரணி அசித விபுலநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி பொரலஸ்கமுவவில் அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் வாகனப் பேரணியில் தற்கொலை குண்டு தாக்கல் செய்ய முயன்ற, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சண்முகராசா கஜபாலினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், இரண்டாவது பிரதிவாதிக்கு மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று(13.11.2025) சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.


இந்த தாக்குதலில், தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சண்முகராசா கஜபாலினி அந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இரண்டாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் எனப்படும் நபர் கடுமையான கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பார்வை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சட்டத்தரணி அசித விபுலநாயக்க சமர்ப்பித்த காரணங்களை பரிசீலித்த நீதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார்.

இவர் 16 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எனது கட்சிக்காரர் மற்றும் தற்கொலை குண்டுதாரியை அறியாத மூவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வழக்கின் சாட்சியங்களின் விசாரணையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் அசித விபுலநாயக்க நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.


வழக்கை வழிநடத்தும் வழக்கறிஞர் அளித்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்டு, வழக்கில் பல ஆவணங்கள் பெறப்படவில்லை என்று கூறி, வழக்கை ஜனவரி 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களான மோரிஸ் என்ற செல்வராசா கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகிய இரு பிரதிவாதிகளுக்கும் சட்ட மா அதிபரால் 17 குற்றச்சாட்டுகளின் கீழ் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!