Wednesday, November 19, 2025
Huisதாயகம்உறவினர்களை நினைவு கூரத் தடையில்லை; புலிகளை நினைவு கூர்ந்தால் சட்ட நடவடிக்கை..!

உறவினர்களை நினைவு கூரத் தடையில்லை; புலிகளை நினைவு கூர்ந்தால் சட்ட நடவடிக்கை..!

நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் தமது உறவினர்களை இழந்துள்ளனர். இழந்த தமது உறவினர்களை நினைவு கூர்வதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு.அதற்கு எவ்வித தடையும் இல்லை. இதனை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருக்கிறது.

ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாத அமைப்பினை சார்ந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கடந்த ஆண்டு நவம்பரில் எமது அரசாங்கம் முழுமையாக ஆட்சியைப் பொறுப்பேற்றது. அன்றிலிருந்து கடந்த ஓராண்டு காலத்துக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சில குழுக்களால் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதி, ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைககளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!