தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டது தெரியாது ஆனால் புதிய இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதா “என நாடாளுமன்றில் செல்வம் அடைக்கலநாதனிடம் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நேற்று (18) கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, ”வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் காவல் துறையினரும், இராணுவத்தினருமே ஈடுபடுவதாக கஜேந்திரகுமார் கூறினார்.
ஆனால் வடக்கிலேயே அதிகளவானோர் கசிப்பு மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அங்குள்ள தாய்மார்கள் கண்ணீர்விட்டு இதுபற்றி கூறுகின்றனர். போதைப் பொருளை ஒழிக்க இராணுவத்தினரும் காவல் துறையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வடக்கை போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றது. இந் நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.” என தெரிவித்தார்.


Recent Comments