வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 21ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (19.11.2025) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரியதுடன், மேயர் மீதான இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறும் கோரினார்.
இதற்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இவற்றை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.


Recent Comments