Wednesday, December 3, 2025
Huisதாயகம்யாழில் காதலனின் தாயின் நகைளை திருடி ரிக்ரொக் பிரபலத்துடன் முதலீடு செய்த காதலி..!

யாழில் காதலனின் தாயின் நகைளை திருடி ரிக்ரொக் பிரபலத்துடன் முதலீடு செய்த காதலி..!

சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்

இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட்ட 8பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக 17 திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய. போதை பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுளார்

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியினை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழில் விற்பனை செய்துள்ளதாகவும் ரிக்ரொக் சமுக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரையில் 27 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாக விசாரணையில் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

இதே போன்று இணையவழி மூலம் அண்மைய நாட்களில் வேறு சில சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்

எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!