பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பயண கட்டணத்தைச் செலுத்துவதற்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கி அட்டை முறைமைக்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பேருந்து நடத்துனரின் கைகளில் வங்கி அட்டையைப் பயன்படுத்துவதற்கான இயந்திரம் இருக்கும் வரை குறித்த திட்டம் வெற்றிபெறாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தத் திட்டத்தை முறையாக செயற்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.


Recent Comments