க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பம் (General Information Technology – GIT) பாடத்துக்கான பரீட்சையும் இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் புதிய திகதி அறிவிக்கப்படும் வரை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலைகள் மூன்றாந் தவணைக்காக 16 டிசம்பர் மீள ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்னர் பரீட்சை நடைபெறும் வாய்ப்புக் காணப்படுவதால் உங்கள் கற்றல் செயற்பாட்டைக் கைவிடாதீர்கள்.


Recent Comments