2025 நவம்பர் 28 ஆம் தேதி காலை 8.30 மணிமுதல் இரவு 11.00 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம் பொக்கனையில் 271 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான மிக உயர்ந்த மழை இதுவாகும்.
அதே நேரத்தில் பல மாவட்டங்களிலும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
முக்கிய மழை பதிவுகள் (28.11.2025 – 8.30 a.m. to 11.00 p.m.)
இடம் மாவட்டம் மழை அளவு (மி.மீ)
புலியம் பொக்கனை கிளிநொச்சி 271.0
துனுமலை எஸ்டேட் கேகாலை 178.5
கட்டுநாயக்க கம்பஹா 176.4
மறிச்சுக்கட்டி மன்னார் 166.0
பொற்கேணி மன்னார் 165.0
மடு மன்னார் 156.5
மன்னார் (நகரம்) மன்னார் 125.9
மடோல்தென்ன எஸ்டேட் கேகாலை 122.0
கிரிந்திவெள கம்பஹா 120.5
மன்னார், கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல இடங்களில் அதிகளவு மழை பதிவானது.


Recent Comments