சூர்யாவின் கருப்பு மற்றும் வெங்கி அட்லுரி இயக்கும் படம் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
இதற்கிடையில் அவர் மலையாள இயக்குனர் ஜீத்து மாதவனுடன் சூர்யா 47 படத்தில் சேர்ந்து பணி புரிகின்றார்.
இந்த படத்துக்கான பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் ஷுட்டிங்கும் துவங்கவுள்ளது.

சூர்யா 47 படத்தின் அறிவிப்புக்குப் பிறகே இதன் ஓடிடி, வெளிநாட்டு மற்றும் இசை உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகவும், ஃபார்ஸ் பிலிம்ஸ் ஓவர்சீஸ் ரைட்ஸையும் திங்க் மியூசிக் இசை உரிமையையும் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் படக்குழுவிற்கு இந்திய ரூபாயில் சுமார் 70 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவின் கருப்பு படத்தின் ஓடிடி உரிமை மட்டும் விற்கப்படாமல் உள்ளது.


Recent Comments