Thursday, January 8, 2026
HuisBreakingவிஜய் சேதுபதியின் 'காட்டான்' முதல் 'ஹார்ட் பீட்' சீசன் 3 வரை..!

விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ முதல் ‘ஹார்ட் பீட்’ சீசன் 3 வரை..!

ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘காட்டான்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார் மணிகண்டன்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பினை பெற்று வருகிறது.

ஓடிடி தளங்களில் பிரபலமான ஒரு நிறுவனமாக ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளது. இதில் தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் வெளியிடப்படுகின்றன.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் இடையில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

ஜியோ ஹாட்ஸ்டார் சென்னையில் சவுத் அன்பவுண்ட் என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியது. இதில் தென்னிந்திய சினிமாவை சார்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இதில் ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகவுள்ள 40 படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் இடம்பெற்ற விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ வெப் தொடர் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘காட்டான்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!