Friday, January 23, 2026
HuisBreaking2025 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி; வெளியாகிய அறிவிப்பு..!

2025 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி; வெளியாகிய அறிவிப்பு..!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை, நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பரீட்சைகள் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 27 ஆம் திகதி வரை பரீட்சைகளை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!