வடக்கின் கல்விக்கு பொறுப்பான அதிகாரி கோழி பண்ணையில் கூட கடமை செய்ய லாயக்கற்றவர். இவ்வாறான திறமையற்ற, பொறுப்பற்றவரை நீக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளும்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த பாராளுமன்றத்திலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த கிராமம் என்ற வகையில் இந்த கிராமமானது பெருமை அடைகின்றது.
அதேபோல இந்த கூமாங்குளம் வட்டாரமானது ஐந்து பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இந்த கிராமமானது கடந்த யுத்த காலத்திலே பல்வேறு வகையான அனர்த்தங்களுக்கு உள்ளானது. இருந்த போதிலும் தற்போது எமது அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் பல வீதிகள் புனரமைக்கப்பட்டது. அதேபோல் இந்த கிராமத்தை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் இந்த கிராமத்தை முதலாவதாக கல்வியிலே அபிவிருத்தி அடைய செய்ய வேண்டும்.
பொருளாதாரம் இன்று நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கல்வியினுடைய அபிவிருத்தி தான் முக்கியம். கல்வியினுடைய அபிவிருத்தி இல்லாத எந்த ஒரு அபிவிருத்தியும் நிலைபேறற்றது.
ஆகவே, எமது கிராமத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வதன் மூலம் இங்கே இருக்கின்ற சிறார்களின் எதிர்காலத்தை சிறப்படைய செய்ய வேண்டும்.
இந்த கிராமத்தில் அண்ணளவாக 7000 குடிமக்கள் இருக்கின்றார்கள். ஆகவே இந்த கிராமத்தை நாம் கல்வி ஊடாகத் தான் அபிவிருத்தி அடைய செய்ய முடியும்.
அதுபோல், இந்த வடமாகாணத்தையும் கல்வியினால் தான் அபிவிருத்தி அடைய செய்ய முடியும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் இலங்கையினுடைய மொத்த தேசிய உற்பத்தியிலே வடக்கு மாகாணமானது 4.4 வீதமாக அதனுடைய உற்பத்தி காணப்படுகின்றது.
இதை எண்ணும் போது மன வேதனையாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த வடக்கு மாகாணத்தின் கல்வியினுடைய வீழ்ச்சி தான் இதற்கெல்லாம் காரணமாக எண்ண தோன்றுகின்றது.
அதேபோல, வடமாகாணம் தேசிய உற்பத்தியில் 4.4%, கல்வியில் 9ஆம் இடம், போதைவஸ்தில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
கல்வியில் தாழ்ந்த நிலையிலும், போதைப் பொருளில் உயர்ந்த நிலையிலும் காணப்படுவதற்கு பலர் வியாக்கியானம் சொல்வார்கள். கல்வி வீழ்ச்சி அடைந்ததன் காரணமாகத் தான் போதைவஸ்தின் பாவனை உயர்ந்தது.
இரண்டும் நேர்மாறாக காணப்படுகின்றது. இதற்கு எல்லாம் காரணம் இந்த சபையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள். வினைத்திறன் குன்றியவர்களாக இருக்கிறார்கள். அதாவது இருக்கின்ற வளங்களை சமனாக பகிர்ந்தளிக்கக் கூடிய திறமையற்ற அதிகாரிகளாக காணப்படுகிறார்கள்.
உதாரணமாக நான் ஒரு கால்நடை வைத்தியர் என்ற வகையில், நான் அண்மையிலே ஒரு கோழி பண்ணைக்கு சென்றேன். அங்கே இந்த பண்ணையாளர் தெரிவித்தார். வைத்தியரே எங்களுடைய பண்ணையில் ஆயிரம் கோழிகள் இருக்கின்றன. 950 முட்டைகள் இடுகின்றன.
அந்த கோழிகளுக்கு சமனாக உணவை பகிர்ந்தளித்ததன் காரணமாகத் தான் அந்த சராசரி முட்டை உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்று சொன்னார். இறுதியாக அவர் சொன்னார் என்னிடம் வட மாகாணத்தில் இருக்கின்ற கல்விக்கு பொறுப்பான அதிகாரி கோழி பண்ணையில் கூட கடமை ஆற்றுவதற்கு லாயக்கற்றவர்.
ஆகவே இவ்வாறான திறமையற்ற லயக்கற்ற பொறுப்புணர்வற்ற அதிகாரிகளை நீக்க வேண்டும். ஒரு காலத்தில் இலங்கையில் வடமாகாணம் தான் கல்வியில் உயர்ந்து நின்றது.
இலங்கை படத்தில் யாழ்பாணத்தை எடுத்தால் இலங்கையின் தலை என்பார்கள். ஆனால் இது தலைகீழாக தற்போது மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. வடமாகாணத்தில் இருக்கின்ற கல்வி நிர்வாக அதிகாரிகளுடைய பொறுப்பற்ற தன்மையும், திறமையற்ற தன்மையும் தான் காரணம் என்பதை நான் இந்த தருணத்தில் உங்களுக்கு அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஆகவே எமது வடக்கு மாகாணம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று சொன்னால் கல்வியில் தான் சிறந்து விளங்க வேண்டும். ஏனென்றால் யுத்த காலத்தில் எம்மிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும், உறவுகளையும், சொந்தங்களையும், பந்தங்களையும் இழந்து கல்வியையும் இழந்துவிட்டோம்.
அதை மீண்டும் நாங்கள் வளர்க்க வேண்டும். எமது வடமாகாணமானது சிறந்து விளங்க வேண்டும் என்றால், இவ்வாறான திறமையற்றவர்களை நீக்கி நல்ல பொறுப்புணர்வுள்ள, நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மீண்டும் கல்வியை வளர செய்வதன் மூலம் எமது வடக்கு மாகாணத்தை பொருளாதாரத்தில் உயரச் செய்ய முடியும் என்று கூறுகின்றேன்.

எமது வடமாகாணத்தை பொறுத்த வரையில் பல இடங்களில் நேரடியாக சென்ற போது, அண்மையில் ஒரு மாணவன் சொன்னான். தங்களுக்கு பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியர் இரண்டு வருடமாக இல்லை என்று. அதற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. நாங்கள் கேட்டால் அவர்கள் அதற்குரிய வெற்றிடங்களை நிரப்புவதில்லை.
இறுதியாக பக்கத்தில் உள்ள அவருடைய நண்பன் சொன்னான் வருகின்ற திருவிழாவில் கோவிலுக்கு நேர்த்தி வைத்து தூக்கு காவடி எடுத்தால் தான் நமக்கு ஆசிரியர் வருவார் என்று. அவ்வாறு நடந்தால் தான் கொடுப்பார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன்.
13ஆம் திருத்த சட்டத்தில் கல்வியினுடைய பல்வேறுபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும்.
ஆனால் அவ்வாறு நியமிக்கவில்லை. இதனுடைய காரணம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எங்களுக்கு உண்டு பண்ணுகின்றது. ஒரு இனம் அதனுடைய கலாச்சாரம் நிலைத்து நீண்டு நிலைக்க வேண்டும் என்றால் கல்வி தான் தக்க வைக்கக்கூடிய இருப்பாகும். அந்த கல்வியின் கேள்விக்குறியானால் இனத்தினுடைய அடையாளம் அற்றுப் போகக்கூடிய ஒரு ஆபத்து இருக்கின்றது.
ஆகவே எதிர்வரும் காலத்தில் எமது ஜனாதிபதியினுடைய நேரடி பார்வையில், நேரடி வழிகாட்டுதலின் கீழே வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமைச்சர் விமல் ரத்நாயக்கா அவர்களுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் இவ்வாறான திறமையற்ற அதிகாரிகளை நீக்கி நல்ல அதிகாரிகளை எமது மாணவச் செல்வங்களுக்கு வழங்கி வடக்கு மாகாணத்தினுடைய கல்வியை உயர்த்துவோம் என்று கூறி இந்த உரையை நான் நிறைவு செய்கின்றேன் என்றார்.

Recent Comments