இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கலாசார பொங்கல் விழா இன்று (16.01.2026) காலை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்றது.
கட்சியின் மாவட்டக்கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழர் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் விழா ஏற்பாடுகள் இடம்பெற்றதுடன் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. தொடர்ந்து கலாசார நிகழ்வுகளும், அதிதிகள் வாழ்த்துரையும் இடம்பெற்றது. மேலும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப் பொருட்களும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பணப் பரிசில்களும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




Recent Comments