வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டு தோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் முன்றலில் இன்று ஞாயிற்றுக் கிழமை (18) காலை நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோர் அழைக்கப்பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளாது புறக்கணித்தனர்.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் வவுனியாவில் வேறொரு பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது நிகழ்வில் விருந்தினராக வடக்கு மாகாண கெளரவ. ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டார்.
இதேவேளை குறித்த நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ, வன்னி மாவட்ட இந்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதுவித அழைப்பும் வழங்கப்படாது திட்டமிட்ட புறக்கணிப்பு இடம் பெற்றுள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் சில அதிரடி உண்மைகள் ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியாகலாம். இதனால் வடக்கின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிக்கு பாரிய தலையிடியாக அது மாறலாம்.


Recent Comments