திருகோணமலை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் இம்மாதம் 14ம் திகதி கைது செய்யப்பட்ட பௌத்தப்பிக்குகள் நான்குபேர் உட்பட பொதுமக்கள் 5 பேர் முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் ஒரு சந்தேக நபரும் முன்னிலையாகி இருந்த நிலையில் குறித்த 10பேருக்கும் விளகமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எஸ் எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணை வழங்குவதற்கு குறித்த நீதிமன்றத்திற்கு அனுமதி இல்லை எனவும் சந்தேக நபர்களால் தொடரப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கானது மீளப் பெறப்பட வேண்டும் என பொலிசாரால் முன்வைக்கப்பட்ட நிலையில், திருகோணமலை கடற்கரையோரமாக 11மீற்றர் தூரத்தில் குறித்த கட்டுமானமானது அமைந்திருப்பதால் அது கரையோரப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றத்தில் கடற்கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் தரப்பினால் முன்வைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது


Recent Comments