கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில் இஞ்சினியர் ஒருவரை மணம் முடித்த யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட கொழும்பில் வசித்து வந்த 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.
மாப்பிளையான இஞ்சியினர் ஓ.எல் வரையும் கல்வி கற்றவர் என்பதுடன் யாழ் தொழில்நுட்பக்கல்லுாரியில் மட்டுமே இஞ்சினியரிங் கற்றுள்ளார்.
தொழில்நுட்ப கல்லுாரியில் கல்வி கற்று வெளியேறிய மாப்பிளை அதன் பின்னர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் கட்டட மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இவரையே குறித்த பெண் வைத்தியரின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு இஞ்சினியர் என கூறி தலையில் மிளகாய் அரைத்து கலியாணம் கட்டி வைத்துள்ளார் புறோக்கர்.
பெண்ணின் இரு சகோதரர்களும் புலம்பெயர் நாட்டில் இருந்து விசாரித்த போதும் மாப்பிளை இஞ்சினியர் என்றே புறோக்கர் மற்றும் மாப்பிளையின் சகோதரர்களால் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று முன்தினம் கொழும்பில் நடந்த திருமண வைபவத்தின் பின் நேற்றே மாப்பிளையின் சுய விபரம் வைத்திய மணமகளுக்கு தெரிய வந்துள்ளது.
அத்துடன் மாப்பிளை 2011ம் ஆண்டு யாழில் உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிய வருகின்றது.
பெருமளவு சீதனப் பகிர்வுகளும் நடைபெற்றுள்ள வேளையில் நேற்று மாலையே மணமகள் மாப்பிளையை விட்டு பிரிந்து கொழும்பில் உள்ள அவளது பெற்றோருடன் வந்து விட்டதாக உறவுகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


Recent Comments