வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், கடந்த 2026.01.15 அன்று குறித்த வீட்டில் பணிப் பெண்ணாக செயற்பட்ட போது, இரவு தன்னை குறித்த சந்தேக நபர் அழைத்துச் சென்று தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் ஒன்றினை வழங்கியதும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments