Sunday, April 26, 2026
Huisதாயகம்யாழில் துப்பாக்கி முனையில் பெண்களுடன் உரையாடல்; மீண்டும் சர்ச்சையில் அர்ச்சுனா..!

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களுடன் உரையாடல்; மீண்டும் சர்ச்சையில் அர்ச்சுனா..!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களுடன் உரையாடிய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் நேற்றைய தினம் (25) இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அந்த காணியானது தனது காணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறி வருகின்ற நிலையில், வேறொரு தரப்பினரும் அதில் தங்களது காணி இருப்பதாக உரிமை கோரி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் குறித்த காணியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபடும் போது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அதில் ஒருபகுதி தமது காணி என்று கூறி முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தனது தற்காப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்து பெண்களை அச்சுறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களும் தன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும் அதனாலேயே தனது பாதுகாப்பிற்காக வெளியில் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி தரப்பால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!