Wednesday, February 5, 2025
Huisதாயகம்யாழில் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயர்தர மாணவி உயிரிழப்பு..!

யாழில் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயர்தர மாணவி உயிரிழப்பு..!

க.பொ.த உயர்தர பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த சனிக் கிழமை (30.12.2024) இடம் பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த மாணவி 30ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றைய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார்.

பின்னர் அவரது தந்தை அலுவலாக வெளியே சென்றவேளை குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!