Saturday, August 29, 2026
Huisதாயகம்யாழ் போதனா வைத்திய சாலையின் வாகன விபத்து; புதிய கண் பரிசோதனை இயந்திரமும் சேதம்..!

யாழ் போதனா வைத்திய சாலையின் வாகன விபத்து; புதிய கண் பரிசோதனை இயந்திரமும் சேதம்..!

அண்மையில் மாங்குளம் பகுதியில் யாழ் போதனா வைத்திய சாலையின் வாகனம் அண்மையில் விபத்துக்குள்ளாகியிருந்தது. இவ் விபத்தின் போது கண் பரிசோதனைக்கான விட்ரெக்டமி என்னும் நவீன இயந்திரம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அண்மையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இயந்திரத்தின் முகத்திரை (டிஸ்பிலே) சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மிக நீண்ட காலமாக போதனா வைத்திய சாலையில் குறித்த இயந்திரத்தின் தேவை வலியுறுத்தப்பட்டு கிடைக்கப்பெற்ற இயந்திரம் எடுத்து வந்த சமயமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது சேதமடைந்த கண் பரிசோதனை இயந்திரத்தின் தற்போதைய சந்தைப் பெறுமதி 36 மில்லியன் ரூபா எனக் கூறப்படுகின்றது.

இதேநேரம் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இயந்திரத்தின் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு சீர் செய்ய முடியுமா என முயற்சிப்பதாக போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!