கண்டி – தவுலகல பகுதியில் வானில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடத்தப்பட்ட மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி தவுலகல, ஹன்தெஸ்ஸ பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த நிலையில், நேற்று (11) காலை தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தவுலகல காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வான் நேற்று(11) பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (12) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வானின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய வானின் சாரதி, கம்பளை, கஹடபிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, 19 வயதான மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேக நபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாவை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளதுடன் அதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை 50,000 ரூபாவை சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை வானில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காம்பொல – மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
Recent Comments