உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2023ஆம் ஆண்டு சமர்ப்பித்த வேட்பாளர்கள், கட்சிக்கு எதிராக செயற்பட்டிருப்பின், அவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“2023ஆம் ஆண்டில் பலரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்பித்திருந்தனர். எனினும், வேட்பு மனுக்களை சமர்பித்தவர்கள் இந்த இரண்டு வருடங்களில் கட்சிக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம்.
அல்லது, சிலர் இறந்திருக்கலாம். மேலும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். அவ்வாறு இருப்பின் அவர்களின் பெயர்கள் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.
அவர்களுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Recent Comments