இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் இலஞ்ச ஒழிப்புப் பிரிவால் கைது..!

மாணவர் ஒருவரை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக வாக்காளர் பெயர் பட்டியலில் பெயரை உள்ளீர்ப்பதற்கு 70 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற கிராம உத்தியோகத்தர் இலஞ்ச ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் மற்றும் அவரின் மனைவியின் பெயரை 2023ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளீர்ப்பதற்காக தலா 10 ஆயிரம் ரூபாவை கொழும்பு குப்பியாவத்தை – மேற்கை சேர்ந்த குறித்த கிராம உத்தியோகத்தர் இலஞ்சமாக பெற்றுள்ளார்.அத்துடன், அந்தப் பெயர்களை கணினிமயப்படுத்தி அதன் உறுதிப்படுத்தலை வழங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இதற்காக குறித்த பெற்றோரிடம் இருந்து அவர் 80 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில், 70 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.