தமிழரசுக் கட்சி கூட்டத்தில் சிவசேனைக்கு என்ன வேலை? எனத் தாக்கிய முன்னாள் மேயர்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று(13) தொகுதிக் கிளை கூட்டம் இடம்பெற்றுள்ளது.குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரிய வருகிறது.

தாக்குதலில் காயமடைந்த ந.ஜெயமாறன் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிவசேனை என்ற அமைப்பின் உறுப்பினராவார்அத்துடன் யாழ். காவல் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றினை அவர் பதிவு செய்துள்ளார்.