ஜனாதிபதியை மீறி அரச நிறுவனங்களிடம் பணம் கோரியுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன..!

அமைச்சர் பந்துல குணவர்த ஹோமாகம பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள வெசாக் வலயத்திற்காக அரச நிறுவனங்களிடம் பணம் கோரியுள்ளார்.

இந்த வருட பொசன் பண்டிகையின் போது ஹோமாகமவில் பொசன் வலயத்தை நடத்துவதற்கு நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.இந்த பொசன் வலயத்தை நடத்துவதற்கு தேவையான பணத்தை தனது அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து வழங்குமாறு கோரி அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு பந்துல குணவர்தன கடிதம் அனுப்பியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுச் செலவினங்களைக் குறைப்பதற்காக சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ள போதிலும் பொசன் வலயங்களுக்கு பணம் வழங்குமாறு கூறுவது முற்றிலும் நியாயமற்றது என அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.