கணவன் ஏற்கனவே திருமணமானவன் என அறிந்த இளம் மனைவி தற்கொலை..!

மட்டக்களப்பில் திருமணமாகி 3 மாதங்களில் இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். அம்பிளாந்துறையை சேர்ந்த கமலவேந்தன் தேவசுதா (25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாயத்துள்ளார். எருவிலில் உள்ள கணவர் வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டது.கடந்த 12ஆம் திகதி இந்த துயரச்சம்பவம் நடந்தது. நேற்று (14) உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.உயிரிழந்த பெண்ணுக்கு 3 மாதங்களின் முன்னரே திருமணமாகியதாகவும், ஏற்கெனவே திருமணமாகியதை மறைத்து கணவர் திருமணம் செய்ததாகவும், இதனை அறிந்த பின்னர் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மனைவி உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.