இன்று சூரிய பெயர்ச்சி -12 ராசிகளுக்குமான மாற்றங்கள் என்ன..?

சூரியன் இன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் போது வைகாசி மாதம் பிறக்கிறது. சூரியனின் இந்த ராசி மாற்றம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தினையும், சில ராசிக்கு கலவையான பலன்களையும் சூரியன் கொடுக்கவுள்ளார். 12 ராசிக்காரர்களுக்கும் இன்று முதல் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவார்கள். ஆரோக்கிய விஷடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தருவதாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கும் சூரிய பகவான் கலவையான பலன்களைத் தரும் காலமாக இருக்கும். திருமண வாழ்க்கை சற்று பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் பேச்சை இக்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும்.

மிதுனம்
இந்த காலக்கட்டத்தில் குடும்பத்தில் தவறான புரிதல்களால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.கடகம்
உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இக்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் துறையில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளை இக்காலத்தில் வீழ்த்துவீர்கள். இருப்பினும் குடும்ப வாழ்க்கை சற்று பதற்றம் நிறைந்ததாகவே இருக்கும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இனி மங்களகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.துலாம்
துலாம் ராசியினருக்கு இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் இக்காலத்தில் சண்டை அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினரின் வாழ்க்கை சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். எனினும், பணி புரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு
இக்காலத்தில் தனுசு ராசியினரின் கோபம் அதிகரிக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களைத் தேடி வரும்.

மகரம்
மகர ராசியினருக்கு இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். ஆயினும், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.கும்பம்
கும்ப ராசியின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், இக்காலத்தில் குடும்பத்தில் கூடுதல் கவனம் தேவை. வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் கலவையானதாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்கு இக்காலத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் உடன் பிறந்தவர்களுடனான உறவு மோசமடையக் கூடும்.