குறைவடையவுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை; வெளியாகிய அறிவிப்பு..!

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



அத்துடன் மின்சாரக் கட்டணங்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விலை இரண்டு கட்டங்களாக குறைக்கப்படும் என்றும், அதேபோல எரிவாயு விலைகளும் மேலும் குறைவடையும் எனவும் குறிப்பிட்டார்.



அதேவேளை குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படும் என கூறிய விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 3000, 5000, 8000 மற்றும் 15000 ரூபா என்ற அடிப்படையில் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் என்றார்.