யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சிங்களவர் சிக்கினார்..!

யாழ் ஒஸ்மானியாக் கல்லுாரிக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியதாக சந்தேகிக்கப்படும் இரு சிங்கள நபர்கள் மீது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.தாக்கப்பட்டவர்களில் ஒருவர் ஓடித் தப்பிவிட மற்றையவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரை கடத்த திட்டமிட்டு அப்பகுதிக்கு இவர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.