யாழில் சிறுவர்களை கடத்த முயன்ற நபர் தொடர்பில் வெளியான தகவல்..!

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப் புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல் தொடர்பாக பல கருத்துக்கள் வெளிவரும் நிலையில் குறித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இவர் ஏன், எவ்வாறு யாழ்ப்பாணம் சென்றார் என்பது தொடர்பான வினாக்களுக்கு இதுவரை விடைகள் இல்லை