மனைவிக்கு Surprise கொடுக்க விரும்பிய பிரான்ஸ் கணவன்; கணவனுக்கு Surprise கொடுத்த மனைவி..!

வலிகாமத்தை சேர்ந்த ஆணொருவர் தென்மராட்சியில் பெண்ணெடுத்து மணம் முடித்துள்ளார். மணம் முடித்து சிறிது காலத்தில் மாப்பிள்ளை பிரான்ஸ் சென்றுள்ளார். இதன் பின்னர் அவர்களது இல்லறம் whatsapp ஊடாக நல்லறமாக தொடர்ந்து வந்துள்ளது.

மனைவியின் பிறந்த நாள் நெருங்கவும், மனைவிக்கு சப்பிறைஸ் கொடுக்க விரும்பியுள்ளார் அந்த அப்பாவி மாப்பிள்ளை. இதற்கான தேடலில் facebook இல் வடமராட்சியை சேர்ந்த Surprise Gift Delivery செய்யும் ஒருவன் அறிமுகமாகியுள்ளான். மாப்பிளை ஒரு தொகை பணத்தை அனுப்பியும் வைத்துள்ளார்.மனைவியின் பிறந்த நாள் அன்று அந்த வடமராட்சி சப்றைஸ் காரன் ஆட்டம் ஆடி கண்டோசும் கேக்கும் கொடுத்துள்ளான். அதன் பின்னர் மொக்கை கேள்விகள் கேட்கவே பெண்ணும் பதில்கள் அளித்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளான் அந்த சப்பிறைஸ் காரன்.அதன் பின்னர் குறித்த வீடியோவை தனது பேஸ்புக்கில் பகிரப் போவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கான ஆக்கள் அதை பார்ப்பார்கள் என்றும் கூறியுள்ளான் (அவனது பேஜ் இல் வெறும் 160 likes தான் இருக்கின்றது என்பது வேறு கதை). அத்துடன் குறித்த பெண்ணை Tag செய்து போடவேண்டும் என கூறி அப் பெண்ணிடம் பேஸ்புக் ஐடியை வாங்கி friend ஆகியுள்ளான்.வெறும் ரெண்டு மாசம் தான்… எப்படியோ தூண்டிலை போட்டு பெட்டையையும், மாப்பிள்ளை போட்ட சீட்டுக் காசையும் சேர்த்து கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். சப்றைஸ் கொடுக்க விரும்பிய மாப்பிள்ளைக்கு பெரிய சப்றைஸ் ஆக திரும்ப கிடைத்துள்ளது. இனியாவது விசர் கூத்துக்கள் போடாது சிந்தித்துச் செயற்படுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *