இன்றைய இராசி பலன்கள் (18.05.2023)

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 04 ஆம் தேதி வியாழக்கிழமை 18.5.2023,சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.08 மணி வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.இன்று காலை 07.50மணி வரை அஸ்வினி . பின்னர் பரணி.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம்.

மேஷம்
எந்தக் காரியத்திலும் முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். வெளிப்படையாகப் பேசி வம்பை விலைக்கு வாங்காதீர்கள். வங்கிக் கணக்கில் இருந்து வீட்டுத் தேவைக்காகப் பணம் எடுப்பீர்கள். உறவுகளில் ஏற்பட்ட சிக்கலால் சிரமப்படுவீர்கள் . நண்பருக்கு தக்க சமயத்தில் பண உதவி செய்து பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள்.

ரிஷபம்
தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெற வெளியூர் செல்வீர்கள். கூட வேலை பார்ப்பவர்கள் செய்யும் இடையூறுகளால் பணியை முடிக்க சிரமப்படுவீர்கள். வீட்டிலும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பதால் உள்ளம் வேதனை அடைவீர்கள். வியாபாரத்தில் சிறிய சறுக்கல்களை சந்திப்பீர்கள். அவசியமான நேரத்தில் நம்பியவர்கள் ஏமாற்றியதால் அவமானப்படுவீர்கள்.மிதுனம்
கேட்ட உதவியை வெளிநாட்டில் இருந்து தாமதம் இன்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வந்த லாபத்தால் வங்கி இருப்பை உயர்த்துவீர்கள். விவசாயப் பொருட்கள் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாகச் சமாளிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். எதிர்காலத்திற்குத் தேவையான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

கடகம்
அரசு வேலையில் விரும்பிய இடத்திற்கு மாற்றல் பெறுவீர்கள். கலைத்துறையினர் சாதனை படைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வெற்றிகரமாக அதைத்தாண்டி செல்வீர்கள். திட்டமிட்டபடி தொழிலை திறம்பட நடத்துவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் கூடுதலான வேலைப் பளுவால் சிரமப்படுவீர்கள்.

சிம்மம்
குடும்பப் பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். விரும்பிய பொருளை வாங்கி கொடுத்து காதலியை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். கிட்னியில் உருவான கல் பிரச்சனைக்காக மருத்துவம் பார்ப்பீர்கள். எடுத்த காரியத்தை தடங்கல் இல்லாமல் முடிப்பீர்கள். மங்கல நிகழ்ச்சியை இல்லத்தில் ஏற்பாடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளிப்பீர்கள்.கன்னி
கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக மாறுவதைப் போல் உணர்வீர்கள். பெண்கள் அண்டை வீட்டில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்காவிட்டால் உறவுகளால் ஒதுக்கப்படுவீர்கள். பிள்ளைகள் மேற்படிப்புக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

துலாம்
வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை விவேகத்தோடு நீக்குவீர்கள். உங்களோடு பகைமை பாராட்டியவர்களிடம் பாசத்தை விதைப்பீர்கள். அலைச்சல் காரணமாக ஒழுங்காகச் சாப்பிட முடியாமல் அவதிப்படுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். பங்குப் பரிவர்த்தனை சாதகமாக இருப்பதால் ஆர்வமுடன் முதலீடு செய்வீர்கள். ஆடை அணிமணிகள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்
வியாபாரத்திற்குத் தேவையான பணம் கைக்கு வர தாமதமாவதால் தடுமாற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வராமல் கவனமாக நடந்து கொள்வீர்கள். அரசுப் பணியாளர்கள் வேலைப்பளுவால் அவதிப்படுவீர்கள். ஆராய்ந்து பார்த்து அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணத்துக்கு தயாராவீர்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பீர்கள்.

தனுசு
வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலை நீங்கி நிம்மதி அடைவீர்கள். தேவையில்லாத செலவு வந்து சிரமப்படுவீர்கள். கூடுதலான லாபம் பார்க்க இரவு பகலாக உழைப்பீர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்த் தாக்கத்தால் உடல் சோர்வடைவீர்கள். தொழிலில் உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.மகரம்
புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு கோயில் திருப்பணிகள் செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். வியாபாரம் தொடர்பான வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முதலாளியின் பாராட்டைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள்.

கும்பம்
உங்கள் வீட்டிற்கு யாரோ செய்வினை வைத்ததாக நம்புவீர்கள். அதிலிருந்து விடுபடுவதற்கு குறி பார்க்க செல்வீர்கள். மனைவிக்கு அடிக்கடி உடல் கோளாறு ஏற்படுவதால் மனம் சங்கட்டப்படுவீர்கள். பொதுப் பிரச்சினையால் ஏற்பட்ட உறவினர்களின் மனக்கசப்பை போக்க பாடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்று சந்தோஷப்படுவீர்கள்.

மீனம்
எதிலும் நேர்மையுடன் நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். கோபத்தை விலக்கி குடும்பத்தில் இதமாக நடந்து கொள்வீர்கள். விருந்தினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணவரவில் திருப்தியான நிலையை காண்பீர்கள்.