சூனியம் நீக்குவதாக கூறி யுவதிகளுக்கு சாராயம் பருக்கி துஸ்பிரயோகம் செய்த முல்லைத்தீவு சாமியார்..!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் சில்மிசம் வைத்த சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தெரிய வருகையில்,

திருகோணமலை பகுதியினை சேர்ந்த பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து பில்லி சூனியம் நீக்கிட்டு சென்றுள்ளார்.இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வவுனியாவில் இருந்து வந்த இரண்டு யுவதிகளுக்கு ஜீவநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து சூனியம் நீக்குவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்று சூனியம் நீக்கியுள்ளார்.

இதில் வவுனியாவினை சேர்ந்த யுவதி ஒருவர் வீடு சென்றுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த யுவதி ஒருவர் தனக்கு நடந்தவற்றை தாய் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் போது யுவதி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுஇந்த சம்பவம் உடனடியாக பொலீசாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து யுவதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பூசாரியினை ஒட்டுசுட்டான் பொலீசார் கைது செய்துள்ளார்கள். இந்த சம்வம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.பாதிக்கப்பட்ட 20 அகவையுடைய யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையின் போது யுவதிக்கு மது அருந்த கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

பூசைக்காக சாரயம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளமையும் இவ்வாறு பல சம்வங்கள் பதிவாகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.