லண்டனிலிருந்து வந்த அத்தானால் கர்ப்பம்; வவுனியாவைச் சேர்ந்த தமிழ் ரீச்சர் தற்கொலை முயற்சி..!

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடந்கவிருந்த நிலையில் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிய வருகின்றது.இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அங்கு வசித்து வந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்கள். சிகிச்சைகளின் பின் உயிர் பிழைத்த குறித்த பெண் 5 மாத கர்ப்பம் என வைத்தியர்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்கள்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லண்டனிலிருந்து இலங்கை வந்து அவர்களின் வீட்டில் 2 வாரங்கள் தங்கி நின்ற அக்காவின் கணவரே காரணம் என தெரிய வந்துள்ளது.குறித்த யுவதிக்கும் லண்டனில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்து ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதற்கான ஆயத்தங்கள் மற்றும் மண்டப ஒழுங்குகள் என்பவற்றுடன் திருமண அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு வழங்கப்படவிருந்த நேரத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.குறித்த யுவதி கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *