வவுனியாவில் மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல்..!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படுகாயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

திங்கட்கிழமை (29) மாலை குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொளுகையினை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றொரு இளைஞர் குறித்த மாணவன் மீது இரும்பு மற்றும் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 18 வயதான மாணவனே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.