பரீட்சை கடமையில் உள்ள நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு பிரத்தியேக நேர்முகத் தேர்வு..!

2019.02.10 ஆம் திகதி நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2023.05.22 தொடக்கம் 2023.06.01 வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கபட்டவர்களில் க.பொ.த சாதாரணதர பரீட்சை கடமைகளின் நிமித்தம் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளிக்க முடியாது போனவர்களுக்கு பிரத்தியேகமாக 10.06.2023 ஆம் திகதி நேர்முகத் தேர்வுகளை நடாத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.மேற்படி விண்ணப்பதாரர்கள் தாம் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் 10 ஜூன் 2023 மு.ப. 8 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு பங்குபற்றுமாறும், குறித்த தினத்தில் கட்டாயம் வருகை தருவதை principalbranchnew@gmail.com எனும் முகவரிக்கு உறுதிப்படுத்தி ஈமெயில் அனுப்புமாறு வேண்டிக் கொள்கின்றது.ஜூன் 10 ஆம் திகதிக்கு பின்னர் மேற்படி நேர்முகத் தேர்வுக்கு தினங்கள் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.