சூடுபிடிக்கும் இலங்கையின் அரசியல்; மாற்றத்திற்காக உருவெடுக்கும் புதிய சக்தி..!

இலங்கையில் மற்றுமொரு புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பதற்கான இரகசிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தென்னிலங்கை அரசியலில் அதிபர் தேர்தலை மையமாகக் கொண்டு இப்புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பதற்கான இரகசிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.புதிய கூட்டணி மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து களமிறக்க திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்தக் கூட்டணியில் பொது வேட்பாளராக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பல்வேறு மதத் தலைவர்கள், சிறிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.