யாழில் பாடசாலை மாணவியின் வீட்டுக் கட்டிலின் கீழ் பிடிபட்ட இளைஞன்; பெற்றோரே அவதானம்..!

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் பிரபல வர்த்தகரின் மகளான பதின்ம வயது பாடசாலை மாணவியின் வீட்டு அறையின் கட்டிலின் கீழ் இருந்து பிடிக்கப்பட்டுள்ளான் யாழ் பல்கலைக்கழக மாணவன். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வர்த்தகர் மற்றும் அவரது மனைவி மற்றுமொரு மகள் ஆகியோர் தீவுப்பகுதியில் உள்ள கோவில் சப்பற உற்சவத்திற்கு சென்ற பின்னரே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த வர்த்தகரின் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் வீடு ஒன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் நண்பனே இவ்வாறு அயலவர்களால் பிடிபட்டவராவார்.



பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு குறித்த மாணவனும் பொழுது போக்குவதற்காக மாலை வேளைகளில் அங்கு நிற்பதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார். அதன் பின்னரே பாடசாலை மாணவிக்கும் அவனுக்கும் இடையே தொடர்புகள் ஏற்பட்டுள்ளது.

பல தடவைகள் குறித்த மாணவி வீட்டில் தனித்திருக்கும் சமயத்தில் பல்கலைக்கழக மாணவன் அவளது வீட்டுக்குள் புகுவதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார்.இது தொடர்பாக அயலில் உள்ள சில இளைஞர்கள் அவதானம் செலுத்தி வந்துள்ளனர்.

இந் நிலையில் நேற்று அம் மாணவன் மாணவியின் வீட்டுக்குள் புகுந்த பின்னர் அயல் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் சிலர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

வீட்டில் சிசிரீவி கமராக்கள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் வீட்டின் மதில் மேல் ஏறிப் பாய்ந்த இளைஞர்கள் வீட்டின் உள்ளே சென்ற போது மாணவி அறை ஒன்றை பூட்டி விட்டு உள்ளேயே இருந்துள்ளார்.



குறி்த்த மாணவியின் பெற்றோருக்கு அயலவர்கள் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து அவர்கள் வீட்டுக்கு வரும்வரையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் வீட்டை முற்றுகையிட்டவாறு அயலவர்கள் இருந்ததாகத் தெரியவருகின்றது.

வர்த்தகர் வீட்டுக்கு வந்த பின்னர் குறித்த அறைக் கதவை திறக்குமாறு மகளுக்கு கூறியும் மகள் கதவைத் திறக்காது இருந்தால் கதவு உடைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாணவி இருந்த அறை கட்டிலின் கீழ் பல்கலைக்கழக மாணவன் பிடிக்கப்பட்டுள்ளான்.

குறித்த மாணவன் பிடிக்கப்பட்ட பின்னர் அயலவர்கள் மற்றும் வர்த்தகரால் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட போது வர்த்தகரின் மகளான பாடசாலை மாணவி மாணவின் மேல் விழுந்து கிடந்து மாணவனை தாக்குதலிலிருந்து காப்பாற்ற முற்பட்டதுடன் மாணவனை பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்தால் தான் தற்கொலை செய்வதாகவும் எச்சரித்துள்ளார்.



இதன் பின்னர் வர்த்தகரின் மனைவி மற்றும் அயலவர்கள் சிலரின் முயற்சியால் மாணவன் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் மாணவனின் பெற்றோரும் அங்கு வரவழைக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது.

இதே நேரம் மாணவன் அறைக்குள் தங்கியிருந்த போது பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டதால் அங்கு பொலிசார் சென்றுள்ளனர். ஆனால் வர்த்தகர் மற்றும் உறவுகள் பொலிசாரை தமது தனிப்பட்ட விடயம் என கூறி திருப்பி அனுப்பியதாக தெரியவருகின்றது.



தற்போதய தகவல்களின் படி பல்கலைக்கழக மாணவன் மற்றும் பாடசாலை மாணவியின் கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் குறித்த மாணவனுக்கே மாணவியை திருமணம் முடித்து வைக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. எனினும் இது எத்தனை சதவீதம் சாத்தியம் என்பது கேள்விக்குறியே???

பதின்ம வயது பெண் பிள்ளைகளை வீட்டில் தனியே வி்ட்டுவிட்டு செல்வதும் தனிப் பாவனைக்காக தொலைபேசி வாங்கிக் கொடுப்பதும், நண்பர்கள் என ஆண் மாணவர்களுடன் அதிக நட்புப் பாராட்ட அனுமதிப்பதும் பல வகைகளிலும் ஆபத்தாக அமைந்து வருவது தொடர்பாக பெற்றோர் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.