கல்வி அமைச்சு மீது இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல அதிபர்களும் ஆசிரியர்களும் சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பரீட்சைகளுக்கு நிதியை வழங்காத கல்வி அமைச்சு, பரீட்சைக்கான கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.தற்போது பெரும் பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புகின்ற பெற்றோரால் பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமை இருக்கிறது.

ஒருசில வசதிபடைத்த பாடசாலைகளில் மட்டுமே இவ்வாறு தவணைப் பரீட்சைகளை நடத்த முடியும் என்ற நிலையில், ஏனைய பாடசாலைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.கல்வி அமைச்சு ஏனைய விடயங்களுக்கு நிதியை செலவிடுவதை விடுத்து கல்வி நடவடிக்கைகளுக்கு நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.