முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவேந்தல் நாள்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கரும்புலிகள் நாள்(தற்கொடை) நினைவு கூரப்பட்டுள்ளது.

பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாள் நிகழ்வுகளை நடந்த சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவு கூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.சிகப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கரும்புலிகளின் பொது திருவுருவப்படம் வைக்கப்பட்டு படத்திற்கான பொதுச் சுடரினை தாயக விடுதலைப் போரில் நான்கு பிள்ளைகளை கொடுத்து அதில் ஒருபிள்ளை கரும்புலியாக மண்ணுக்கு வித்தான பிள்ளைகளை பெற்றெடுத்த தாயாரான புஸ்பராணி ஏற்றிவைத்தார்.தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கான சுடர்களை மூன்று மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றியதை தொடர்ந்து கரும்புலிகளின் பொது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி நடைபெற்றுள்ளது.